Monday 30 January 2012

பாரத ரத்னாவுக்கு சச்சின் தெண்டுல்கர் தகுதியானவரா ? - ஒரு பார்வை

சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த சில மாதங்களாக பலரினால் எழுப்பப்பட்டு வந்தது .  இந்த நிலையில் இந்த விருதுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்றது விமரிசனங்கள் எழுந்ததும் நமக்கு தெரியும் .  ஆனால் உண்மையில் சச்சின் இந்த பெரிய விருதுக்கு தகுதியானவரா என்பதை சிந்தித்து பார்த்ததின் விளைவு தான் இந்த பதிவு எழுதப்பட காரணம் .


லிட்டில் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் சச்சின் தனது 16 வது வயதில் முதல் முறையாக Internation cricket ல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் .  அன்றில் இருந்து இன்று வரை அவர் கிரிக்கெட்டில் அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் நெடிய பயணம் சாதனையாகவே இருக்கிறது .  இது வரை 99 சதங்களை அடித்துள்ள அவர் முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் படைத்தவர் .
மாத்திரமல்ல ... பல விருதுகளுக்கும் இவர் சொந்தகாரர் என்பதயும் நாம் குறிப்பிட்டாக வேண்டும் .  ராஜீவ் காந்தி கேல் ரத்னா ,  அர்ஜுனா  , பத்ம பூசன் ,  பத்ம விபூசன் போன்ற விருதுகள் இவரின் பெருமையை எடுத்து சொல்லும் .  அப்படியெனில் இவருக்கு பாரத ரத்னா தகுதியானது தான் என்று நினைக்க தோன்றுகிறது ....... சரி ... ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு பாரத ரத்னா குறித்கு கொஞ்சம் நாம் பார்ப்போம் .


இந்திய குடியரசின் மிக பெரிய விருதான் பாரத ரத்னா 1954 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது .   நாட்டிற்காக செய்த மிகப் பெரிய சேவையை மதித்து இந்த விருது வழங்கப்படுகிறது .   அன்றில் இருந்து இன்று வரை 41 நபர்கள் இந்த விருதை பெற்று இருக்கிறார்கள் .  மேலும் தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Bharat_Ratna .   இந்த சூழலில் தான் விளையாட்டு துறைக்கும் இந்த விருது வழங்கப்படலாம் என்று மாற்றம் கொண்டு வரப்பட்டது .



 இங்கு தான் இடிக்கிறது .....  நாட்டிற்காக செய்த மிகபெரிய சேவைக்கு அளிக்கப்படும் விருதை உண்மையில் சச்சினால் பெறமுடியுமா ...?  சில காரியங்களை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம் என்று தான் நினைக்கிறேன் .

 முதலாவது  சச்சின் தெண்டுல்கர் நாட்டிற்காக விளையாடவில்லை என்பது தான் உண்மை .   அவர் BCCI எனப்படும் ஒரு கிளப் அணிக்காக தான் விளையாடுகிறார் .   இந்த BCCI ஒரு அரசு துறை என்று நினைத்தால் ஏமாந்து தான் போவோம் .  இது முழுவதும் ஒரு தனியார் கிளப் .  தமிழ்நாடு சொசைட்டி விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது .   கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக அரசால் வரிவிலக்கு பெற்ற இந்த நிறுவனம் IPL போன்ற போட்டிகளை நடத்தை கல்லா கட்டி கொண்டது நாம் அறிந்தது தான் .  இப்படி நாட்டிற்காக விளையாடாத ஒரு நபருக்கு எப்படி பாரத ரத்னா விருது வழங்க முடியும் ...?


 நீங்கள் கேட்கலாம் ... சச்சின் தெண்டுல்கருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிட்டவில்லை என்று சொல்லி ......   சில உதாரணங்களை  தருகிறேன்  பாருங்கள் .   முதல் முதலாக 1998 ம வருடம் காமன் வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்ட போது  சச்சின் டொராண்டோவில் நடைபெற்ற விளையாட்டிற்கு அனுப்பபட்டார் . அதற்க்கு சொல்லப்பட்ட காரணங்கள் அபத்தமானவைகள் .  தகவலுக்கு : http://indiatoday.intoday.in/story/comedy-of-errors--cricket-at-the-1998-commonwealth-games/1/103765.html

சரி முதன் முதலாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்ட போது BCCI நேரடியாக் சொல்லிவிட்டது இந்திய  கிரிக்கெட் அணி கலந்து கொள்ளாது என்று சொல்லி .  தகவலுக்கு : http://cricketnext.in.com/news/no-indian-cricket-teams-in-asian-games/48725-13.html 


சரி ... இதில் சச்சினின் பங்கு என்ன ....?  நாட்டிற்காக விளையாட வாய்ப்பு கிடைத்த போது சச்சினின் பங்கும் , அவரின் பங்களிப்பும் என்ன ...?  ஒன்றுமில்லை ... BCCI என்ன சொன்னதோ ... அதன் படி அவர் நடந்து கொண்டார் .  ஏன் எனில் , சச்சின் BCCI ன் ஆட்டக்காரர் தானே தவிர ,  இந்தியாவின் ஆட்டக்காரர் அல்ல  எனபது தான் உண்மை .


சரி .... கிரிகெட் வளர்ச்சியில் இவரின் பங்கு என்ன என்று பார்த்தோம் என்றால் .... தான் உண்டு ... தன் வேலை உண்டு என்று தான் இருப்பவர் .  உண்மையில் விளையாட்டிற்கு இவர் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் எனில் கபில்தேவ் முதன்முதலில் ICL ஆரம்பித்த போது அவருக்கு குரல் கொடுத்திருக்க வேண்டும் .   ஆனால் BCCI யின் சம்பளம் வாங்கும் உண்மையான ஆட்டக்காரர் என்பதால் IPL போட்டிகளில் விளையாடி ICL யை நசுக்கிய பெருமைக்கும் ஓரளவு சொந்தக்காரர் .

மேற்கண்ட காரணங்களை பார்க்கும் போது சச்சின் தேசத்திற்காகவும் ,  விளையாட்டிற்கும் எதுவும் செய்யவில்லை  ( பாரத ரத்னா பெருமளவுக்கு )  என்று தான் நினைக்க தோன்றுகிறது .   சச்சின் தெண்டுல்கர் எளிமையான  , மிகப்பெரும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பதை நான் ஒத்து கொள்ளும் அதே நேரத்தில் பாரத ரத்னா அம்பேத்கார்  , பாரத ரத்னா MGR போன்றவர்களுடன் ஒப்பிட என மனம் துணியவில்லை ......
  


11 comments:

  1. கிரிக்கெட் விளையாட்டால்தான் இந்தியாவுக்கு பெருமை போன்ற ஒரு மாயை நம் மக்களிடம் குடிகொண்டுள்ளது .அதன் காரணமாக பிற விளையாட்டுத் துறையில் உள்ள சிறந்த வீரர்களோ (லியாண்டர் பயஸ்,சாய்னா etc ) கண்டுகொள்ளப்படுவதில்லை .நானும் ஒரு கிரிக்கெட் பைத்தியம் என்பதால் எனக்கும் சச்சின் மிகவும் பிடிக்கும் .ஆனால் பாரதரத்னா விஷயத்தில் தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் சரியே .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் , ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ . கூடல் பாலா

      Delete
  2. ///கிரிகெட் வளர்ச்சியில் இவரின் பங்கு என்ன என்று பார்த்தோம் என்றால் .... தான் உண்டு ... தன் வேலை உண்டு///
    சரியாக சொன்னீர்கள் நண்பரே.

    மீடியாக்கள் கிரிக்கெட்டை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்விளைவுகள்தான் இதெல்லாம். ஹாக்கியை சீண்டுவார் கூட இல்லை... இந்த நிலை மாறுமா...?

    ReplyDelete
    Replies
    1. இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியின் நிலை கொஞ்சம் பரிதாபம் தான் . நன்றி நண்பரே

      Delete
  3. நல்ல கருத்து. உங்கள் கருத்துக்கு என்னுடைய ஆதரவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நண்பர் அக்கினி குஞ்சு உங்கள் ஊக்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  5. நேதாஜிக்கே இன்னும் தரப்படவில்லை. 115 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர்கள் எப்படித் தேர்ந்த்டுக்கின்றனர் என்பது புரியாத புதிர்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன் ஐயா.... தங்கள் வரவுக்கு மிக்க நன்றி

      Delete
  6. இந்தியரே! வீரன் செண்பகராமன் எம்டன் கப்பலில் வந்து சென்னையில் குண்டு போட்டது உண்மையா? இல்லை. அவர் அந்தக் கப்பலில் பயணிக்கவே இல்லை.என்று எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற கற்பனை நாவல் கூறுகின்றது. வல்லமை.காமில் பவள சங்கரி நூல் விமர்சனம் செய்துள்ளார். திவாகர் எழுதியுள்ளார். பழனியப்பா பிரசுரித்துள்ளது, பதில் சொல்லுங்க்கள் இந்தியரே. நன்றியுடன்,

    ReplyDelete
    Replies
    1. ஐயா , எனக்கு இப்பொழுது பதில் தெரியவில்லை . நான் ஒருமுறை அந்த நூலை படித்து பார்த்து விடுகிறேன் . தங்களின் வரவுக்கு நன்றி

      Delete
  7. Your blog is very nice.But it seems not updated for a long time?

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி