Monday 9 January 2012

புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்

புகுஷிமாவில் நடந்த விபத்துக்கு பின்பு உலகம் முழுவதும் அணுமின் நிலையங்கள் மூடப்படுவதாகவும் அதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் எனவும் போராட்ட குழுவினர் தங்கள் கூட்டங்களில் பேசி , மக்களை குழப்பி வருகின்றனர் .  இந்த நிலையில் ,  உண்மையில் உலக அளவில் அணுசக்தி துறையின் பாதிப்பு /  மேம்பாடு  ( புகுஷிமாவுக்கு பிறகு )  என்ன என்பதை ஆராய முற்ப்பட்டதன் விளைவு தான் இந்த கட்டுரை ...


ஜப்பான் : முதலாவது ஜப்பானில் இருந்து நாம் ஆரம்பிப்போம் .  புகுஷிமாவுக்கு பிறகு ஜப்பான் அணுமின் திட்டங்களை கைவிடாமல் 17 - 08  - 2011  அன்று டோமாரி அணுமின் நிலையத்தின் 3 வது யூனிட்டை இயக்கியது .

 சீனா :  25 - 10 - 2011  அன்று சீனா Qinshan Phase II யூனிட்டில் அணு எரிபொருளை நிரப்பியது .  27 - 07 - 2011  அன்று தனது முதல் ஈனுலையில் ( Fast Breeder reactor ) இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை மின் இணைப்பில் இணைத்தது. 


கொரியா  : 02 - 08 - 2011  அன்று கொரியா தனது Shin Kori Nuclear Power Plant ன்  நான்காவது யூனிட்டில் அணு கொள்கலனை நிறுவியது . இந்த அணுமின்நிலையம் அதி நவீன APR - 1400 வகையை சேர்ந்தது .

பங்களாதேஷ்  : 02 - 11 - 2011  அன்று பங்களாதேஷ் தனது முதல் அணுமின் நிலையத்தை கட்டுவதற்காக ருசிய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது .


துருக்கி  : 17  - 08  - 2011  அன்று தனது நாட்டில் அணுமின் நிலையம் கட்டுவதற்காக மற்ற நாடுகளுடன் பேச்சு நடத்தி கொண்டு இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது .


 ஜோர்டான் : 17 - 08 - 2011  அன்று தனது நாட்டின் அணுமின் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை சில மாதங்களில் அறிவிக்க போவதாக ஜோர்டான் அறிவித்தது .

 வியட்நாம்  : 06 - 10 - 2011  அன்று தனது நாட்டின் முதல் அணுமின் திட்டத்தை அமைக்கும் ஒப்பந்தத்தில் ஜப்பானுடன் கையெழுத்து இட்டுள்ளது .



அமெரிக்கா : ஏறக்குறைய 20 புதிய அணுமின் திட்டங்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது . தவிர இரண்டு அதி நவீன ABWR வகை அணுமின் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது . இவற்றில் பல 2020 ல் இயங்கும் என தெரிகிறது .   நான்கு AP 1000 வகை அணுமின் திட்டங்களுக்கான பணிகள் கிட்டத்தட்ட 1 . 6 பில்லியன் டாலர் செலவில் Vogtle மற்றும் Georgia பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது .

 கனடா  : ஏறகனவே 15 சதவீத அணுமின் சக்தியை பெற்று வரும் கனடா வரும் 10  ஆண்டுகளில் ஒன்பது புதிய அணுமின் திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது .

 பிரான்ஸ்  : Flamnaville என்ற இடத்தில கட்டப்பட்டு வரும் 1600 MWe அணுமின் நிலையம் இந்த வருடத்தில் செயல் பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இங்கிலாந்து :  2019 வருடத்திற்குள் , நான்கு 1600 Mwe அணுமின் நிலைய்னகளை இயக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது .


 ருமேனியா  : 2017 ம் வருடத்திற்குள் 2  அணுமின் நிலையங்கள் கனடா தொழில் நுட்பத்தில் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

ஸ்லோவாகியா :  2012 ம் வருடத்தில் , தற்பொழுது கட்டப்பட்டு கொண்டிருக்கும் 470 MWe அணுமின் நிலையம் ( Mochovce ) செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பல்கேரியா :  ருசிய தொழில் நுட்பத்தில் இரண்டு 1000 MWe அணுமின் நிலயங்கள் கட்டப்பட தீர்மானிக்கப்பட்டுளது.

 ரஷ்யா  :  10  அணுமின் நிலையங்கள் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்றன .  ஒரு அதிநவீன ஈனுலையும் அதில் அடக்கம் .   புதிய 14  அணுமின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது . 2016 ம் வருடத்திற்குள் 9 . 8 GWe மின்சாரம் புதிய அணுமின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தைவான்  :  இரண்டு அதிநவீன ABWR அணுமின் நிலையங்களை Taipower நிறுவனம் கட்டி வருகிறது .

பாகிஸ்தான் :  சீனாவின் உதவியுடன் 300 MWe அணுமின் நிலையத்தை Chashma பகுதியில் கட்டி வருகிறது .

UAE :  2020 ம் வருடத்திற்குள் நான்கு 1400 Mwe அணுமின் நிலையங்களை அமைக்கும் ஒப்பந்தத்தை தென் கொரியாவுக்கு அளித்துள்ளது .

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சில பிரசாரங்களை பொய் என்று தோலுரித்து காட்டுவதை நாம் மறுக்க முடியாது . தற்காலத்தில் மின் திட்டங்களுக்கு பயன்படும் எரிபொருட்கள் வேகமாக குறைந்து வருவதாலும்  , தினமும் மின் தேவைகள் அதிகரித்து வருவதாலும்  , உலகம் அனைத்தும் அணுமின் திட்டங்களுக்கு நேராக சென்று கொண்டிருக்கும் போது ,  அதி நவீன , மிகவும் பாதுகாப்பான  ,  மூன்றாம்   தலைமுறை  கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாம் ஏன் வரவேற்க கூடாது ...?

6 comments:

  1. Ulagaththula ivlo vishayangal nadakkudhu. Namma Indians illiterate a irukkara varai, avangala yaaraalayum kaappaatha mudiyadhu!

    ReplyDelete
    Replies
    1. nanbaray engala kaapattha engalukku theriun.

      Delete
    2. @ Belarmin : நண்பருக்கு வணக்கம் . தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி . தங்களின் ஆற்றலும் , அறிவும் தவறாக திசை திருப்பபடகூடாது என்பது தான் எனது ஆசை . தொடர்ந்து உங்களின் கேள்விகளை வரவேற்கிறேன் . நன்றி

      Delete
  2. @ Gold : நண்பரே ... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . தொடர்ந்து வருகை தாருங்கள்

    ReplyDelete
  3. @ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

    // வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம்.//
    மிக எளிதாக எனது அத்தனை பதிவுகளிலும் இந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் மிகுந்த ஆதாரத்துடன் எழுத பட்டிருக்கும் போது , நீங்கள் எளிதாக தவறு என்று சொல்லுவதை ஏற்று கொள்ள முடியவில்லை .

    நீங்கள் இன்னும் , அணுமின் சக்தியை குறித்த குறுகிய / தவறான கண்ணோட்டத்தில் காண்பதால் தான் தங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் . உங்களது கேள்விகளை நீங்கள் முன் எடுத்து வைக்கலாமே . நாம் ஆரோக்கிய விவாதம் செய்வோம்.

    தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

    ReplyDelete
  4. வாங்க திரு.இருதயம்,
    ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்த், பெல்ஜியம் போன்ற நாடுகள் அணு உலைகளை மூட முடிவேடுத்துள்ளதை
    ஒப்புக்கொள்கிறீர்களா? அதை பற்றி தங்கள் கருத்து என்ன?
    அதை ஏன் தங்கள் பதிவில் குறிப்பிடவில்லை.
    ஒரு பதிவை எழுதும்பொழுது இரண்டு நிலைகளையும் ஆராய்வது தானே சரி?
    தங்கள் பதிவை என்னுடைய பதிவிலும் தந்து விடுங்கள். அது மற்றவர்களுக்கு படிக்க வாய்ப்பாக அமையும்

    தங்கள் வருகைக்கும் சுட்டி தந்தமைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி