Wednesday 1 February 2012

ஒரு ஊர்ல ஒரு பெண்ணும் - கூடங்குளம் ஒப்பாரி போராட்டமும்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக போராடி வரும் குழுவினர் ஒரு விசித்திரமான போராட்டம் ( ஒப்பாரி ) ஒன்றை நடத்தினார்கள் .  வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு சில பெண்கள் தலைவிரி கோலமாக போக , சில ஆண்கள் மொட்டை அடித்து கொண்டு அணுஉலை மாதிரியை எரித்தார்கள் என்பதை நான் நாளேடுகள் , தொலைக்காட்சிகள் , பதிவுகள் மூலமாக அறிந்து கொண்டேன் .  இதை படித்தவுடன் எனக்கு அழவா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை .   அப்பொழுது என்னுடைய  8ம் வகுப்பு தமிழ் ஆசிரியர் சொல்லிய ஒரு கதை ஓன்று தான் நியாபகத்திற்கு வந்தது .  அந்த கதையை அப்படியே எழுத நான் ஆசைப்படுகிறேன் .  தொடருங்களேன் .....




ஒரு அமைதியான கிராமத்திலே ஒரு வாலிப பெண் தன குடும்பத்துடன் வசித்து வந்தாள்  .  அந்த கிராமத்திற்கு திடீரென ஒரு பெரியவர் ( வயதில் ) வருகை தந்தார்  .  அப்பொழுது அந்த கிராமத்தின் வெளியில் ஒரு பெரிய கால்வாய் வெட்டி கொண்டு இருந்தார்கள் ( குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லுவதற்காக ) .  இந்த வாலிப பெண்ணுக்கு இந்த கால்வாய் எதற்கு வெட்டப்படுகிறது என்று தெரியாத பொழுது , அந்த ஊருக்கு வந்த அந்த பெரியவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள் .  இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் .. பிறகு அந்த வாலிப பெண் வீட்டிற்கு வந்து விட்டாள்.

வீட்டிற்கு வந்த பெண் " ஓ " என்று அழ ஆரம்பித்து விட்டாள் . அந்த பெண் அழுவதை கேட்ட அவளின் குடும்பத்தினர் அனைவரும் தன பெண்ணுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி அவர்களும் அழ ஆரம்பித்து விட்டனர் .  இப்படி ஒரு குடும்பம் அலுத்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் அந்த தெருவில் உள்ளவர்கள் அழ ஆரம்பித்து விட்டனர் .  ஒரு தெருவே அழ ஆரம்பித்த உடன் அந்த அன்பான கிராமமே அழ ஆரம்பித்து விட்டது .  ஆனந்தம் குடி கொண்ட அந்த கிராமத்தில் அழுகை சத்தம் மாத்திரம் கேட்டது .  ஆனால் யாரும் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கவில்லை .


இந்த சூழலில் அந்த கிராமத்திற்கு ஒரு துறவி வந்தார் .  ஒரு கிராமமே அழுகிற சத்தத்தை கேட்ட அவர் அங்கிருந்த ஒரு நபரிடம் கேட்டார் , " ஐயா ஏன் எல்லாரும் அழுகிறீர்கள் ? " என்று.  உடனே அந்த நபர் சொன்னார் , " எனக்கு தெரியாது , இந்த தெருவில் உள்ளவர்கள் எல்லாரும் அழுதார்கள் . அதனால் நானும் அழுதேன் " என்று .   


உடனே அந்த துறவி அந்த தெருவில் குடியிருக்கும் ஒரு நபரிடம் கேட்டார் , " ஐயா ஏன் எல்லாரும் அழுகிறீர்கள் ? " என்று.  உடனே அந்த நபர் சொன்னார் , " எனக்கு தெரியாது , இந்த வீட்டில்  உள்ளவர்கள் எல்லாரும் அழுதார்கள் . அதனால் நானும் அழுதேன் " என்று .

உடனே அந்த துறவி அந்த வாலிப பெண்ணின் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டார் , " ஏன் நீங்கள் அழுகிறீர்கள் ..?"  என்று .  அதற்க்கு அவர்கள் சொன்னார்கள் , " எங்களுக்கு தெரியாது ... எங்கள் வாலிப பெண் குலுங்கி குலுங்கி அழுகிறாள் , அதனால் நாங்கள் அழுகிறோம் " என்று 


 உடனே அந்த துறவி , அந்த வாலிப பெண்ணை கூப்பிட்டு , " நீ ஏம்மா அழுகிறாய் " என்று கேட்டார் .  உடனே அந்த பெண் சொன்னாள் , :"  ஐயா ...இந்த ஊருக்கு வெளியில் ஒரு கால்வாய் வெட்டுகிறார்கள் அல்லவா ...? .  துறவி சொன்னார் , " ஆம் அம்மா .... அதற்கு என்ன ...?"  அந்த பெண் பதில் சொன்னாள் , " ஐயா ... எனக்கு இன்னும் கொஞ்ச காலத்தில் கல்யாணம் நடக்கும் தானே ".   துறவி சொன்னார் , " நிச்சயமாக அம்மா .... உனது பிரச்சினை தான் என்ன ...?.   


அந்த பெண் சொன்னாள் , " ஐயா ... அப்படி திருமணம் ஆனபிறகு எனக்கு குழந்தை பிறக்கும் .  அப்படி பிறக்கும் குழந்தையை நான் எடுத்துக்கொண்டு என அம்மா வீட்டிற்கு வருவேன் .  அப்பொழுது சமையல் அறையில் நான் வேலை செய்து கொண்டிருப்பேன் . அப்பொழுது என அருமை மகன் , எங்கள் வீட்டில் இருந்து தவழ்ந்து வெளியேறி  , மெல்ல மெல்ல போய் அந்த கால்வாயில் விழுந்து விடடால் ,  நான் என் பிள்ளைக்கு என்ன செய்வேன் ..."  என்று மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டாள்.


இந்த பெண்ணின் கதையை கேட்ட அதனை பெரும் அழுவதை உடனே நிறுத்தி விட்டு கோபத்துடன் அவளை பார்த்தார்கள் .  அந்த துறவை அவளை சமாதானபடுத்தி விட்டு , அவளிடம் கேட்டார் , "  உனக்கு யாரம்மா ..இப்படி சொல்லி தந்தது ..?  என்று .   அந்த பெண் ஒன்றும் புரியாதவளாக அந்த பெரியவரை ( யாரிடம் கால்வாயை குறித்து கேட்டாளோ )  கை காட்டி நின்றாள்


 இந்த கதையை கேட்டவுடன் எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது .  அப்பொழுது எனது தமிழ் ஆசிரியர் சொன்னார்

" எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்  அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ".  

இந்த குறளை விளக்குவதற்கு அவர் சொன்ன கதை , அவர் எங்களை விட்டு மறைந்து போனாலும் , இன்னும் எனது நினைவில் இருக்கிறது .



கூடங்குளம் மற்றும் அதை சேர்ந்த பெண்மணிகள் ஒப்பாரி வைப்பதை பார்க்கும் போது எனக்கு அந்த கதை தான் நியாபகத்திற்கு வருகிறது .  உண்மையில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் அல்லது தங்கள் கணவர்கள் தினமும் குடிப்பதினால் அவர்களின் வாழ்கையை அழிக்கும் டாஸ்மாக் கடையை நினைத்து இப்படி அழுதால் கூட ஏதாவது பாக்கியமுண்டு .   என்றாவது ஒரு நாள் உண்மை விளங்கும் போது இவர்களை குழப்பி விட்ட அந்த பெரிய மனிதர் ( ?) இவர்களுக்கு முன்பு வெட்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .   யார் அந்த பெரிய மனிதர் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் ..

11 comments:

  1. நண்பரே..Don't judge a book by its cover...

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      நீங்கள் கூறுவது போல புத்தகத்தின் அருமை அட்டையை பார்த்து கணக்கிடமுடியாது என்பது உண்மை . நான் அதை ஏற்கிறேன் . அப்படி என்றால் நீங்களே ஒத்து கொண்டீர்கள் இந்த புத்தகத்தின் ( போராட்டத்தின் ) அட்டை ( ஒப்பாரி ) அசிங்கமானது என்று ....

      நான் மிகவும் மதிக்கும் சில பதிவர்களில் நீங்களும் ஒருவர். தங்களின் தொடர்வருகை இன்னும் என்னை ஊக்குவிக்கும் .

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. இது ஒரு கேவலமான பதிவு. ஏதோ புத்தி பூர்வமாக கூடங்குளம் அணு மின்நிலையத்தை பற்றி எழுதுவீர்கள் என்று பார்த்தேன் இவ்வளவு கேவலமா இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கூடன் குளம் அணு மின்நிலையம் என்பது அபாயகரமானது எப்படி என்றால் அணு உலை சுனாமி வந்து தகர்த்து விடும் என்பதால் மட்டும் இல்லை. அணு கழிவுகளால் உருவாகும் ஆபத்து. அணு கழிவுகள் ஆபத்தற்று போக, நீர்த்து போக இருபத்தி ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகும். முதலில் அறிவியலை படியுங்கள் அப்புறம் பதிவு எழுதலாம். கேட்டால் நான் இந்தியன் குப்பையில் தூக்கி போடுங்கள் உங்கள் இந்தியன் என்கிற போலி மாயையை. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் இந்தியாவை எப்போதோ பட்டா போட்டு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வித்தாச்சி. புரிந்ததா. manmathan.

    ReplyDelete
    Replies
    1. அன்பு Anonymous ( மன்மதன் ) நண்பருக்கு வணக்கம் ,

      // இது ஒரு கேவலமான பதிவு. ஏதோ புத்தி பூர்வமாக கூடங்குளம் அணு மின்நிலையத்தை பற்றி எழுதுவீர்கள் என்று பார்த்தேன்//
      உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி . நீங்கள் உணர்ச்சி வேகத்தில் பேசுகிறீர்கள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது . அது போல எனது வலைபூவிற்கு உங்களின் வருகை முதல் வருகை என்பதும் எனக்கு தெரிகிறது . எது அறிவு என்று நினைக்கிறீர்கள் ...? பொய்யை உண்மையை போல பேசுவது அறிவு என்று நினைக்கிறீர்களா ...? அப்படி நீங்கள் நினைத்தால் எனக்கு அறிவு இல்லை என்றே நீங்கள் வைத்து கொள்ளலாம் . ஏன் எனில் எனக்கு உண்மையை உண்மையாக தான் பேச தெரியும் .

      கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த வல்லுனர்களின் புத்தி கூர்மையான கருத்துகளை நீங்கள் எவ்வளவு தூரம் மதித்து உள்ளீர்கள் . அப்துல் கலாம் அவர்களை தரை மட்டமாக பேசுகிற கூட்டமும் , புற்று நோய்க்காகவே தன வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிற மருத்துவர் . சாந்தா அவர்களை மட்டமாக பேசுகிற கூட்டமும் உங்களுக்கு பெரிதாக தெரியலாம் . ஏன் தெரியுமா ...? மக்களை உண்மையை அறிந்து கொள்ளவிடாமல் , அறிவியலுக்கு எதிராக , ஆக்கத்திற்கு எதிராக மூளை சலவை செய்திருக்கிறார்கள் . இது சமூகத்திற்கு எவ்வளவு பெரிய பாதிப்பு ....?

      பள்ளியில் பாடம் படிக்கும் மாணவர்களை அணுமின் நிலையத்திற்கு விரோதமாக போராட செய்கிறார்கள் . இது தான் நீங்கள் வருங்கால சமுதாயத்திற்கு செய்யும் தொண்டா ...?

      அறிவுப்பூர்வமாக மக்களை சிந்திக்கவிடாமல் மாக்களாக வழிநடத்தும் சில கும்பல்கள் இந்த மாதிரி அசிங்கமான போராட்டங்களுக்கு மக்களை வழி நடத்தி செல்லுவதை பார்த்து நீங்கள் சும்மா இருக்கலாம் . ஆனால் என்னால் முடியாது . எனவே நீங்கள் சொன்னபடி . இந்த மாதிரி கேவலமான பதிவுகள் தொடரும் போலிகளின் முகமூடி கிழிக்கப்படும் வரை , நீங்கள் உண்மையை அறிந்து கொள்ளும் வரை . தயை கூர்ந்து நான் மக்களின் உண்மையான உணர்சிகளை குறை கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள் . அவர்களை வழிநடத்தும் மாயையை சாடுகிறேன் ...

      அணுக்கழிவு குறித்த தகவல்களுக்கு எனது "அணு கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை" என்ற பதிவை பாருங்கள் . http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_15.html .

      //முதலில் அறிவியலை படியுங்கள் அப்புறம் பதிவு எழுதலாம்.//
      உண்மையில் இது ஒரு வரவேர்க்கதகுந்த கேள்வி. I LIKE IT SO MUCH . இந்த வார்த்தையை தான் நானும் சொல்லி கொண்டு இருக்கிறேன் .

      தங்களின் தொடர் வருகையை எதிர்பார்க்கிறேன் . நன்றி

      Delete
    2. Kindly see my Compilation about Nuclear Power Plants...."கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்பு " - http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_02.html.

      As stated above , the facts are taken on science basis...

      Thank You...

      Delete
  3. You argue that Radiation from nuclear power plant will not causes cancer. This is baseless. Many people living around Kalpakkam are affected with cancer. I have witnessed this through journals and TV.
    Coastal malabar region is prone to Cancer due to radioactive elements available there. Based on these facts only people are agitating against the Koodankulam power plant.I cant assure that the people can win against this corporate world. But I can tell you that in this modern world greedy people ruin our mother nature. One such thing is nuclear power. I wish all the nature loving people to join together and fight against this greedy and cruel people and save our earth.

    ReplyDelete
    Replies
    1. Dear Friend,

      Thank you very much for your visit and your valuable comment. you have argued many things for me.... Come on....

      //Many people living around Kalpakkam are affected with cancer. I have witnessed this through journals and TV.//
      It is understood that you are coming to an conclusion based on reports of agitation group by TV and News papers. but why you are accepting the comments given on the subject by Doctor.Santha , dean of Adayar Cancer Institute?

      You are agreeing that Naturally we are getting more radiation. Why ....? you please think about that ... Yes we don't have any safety system to protect the natural Radiation. But Nuclear power plants are not like that. They have a separate Protection System.

      You are arguing for the Nature loving People... I too... Yes Friend... I too.... Thats why i am suggesting Nuclear. If you are loving Nature , you have to fight against Thermal Power Plant which produces Green House Gases , which spoils our Ozone layer , which results melting of Ice , which swallow our coastal villages . Can you...? If you really want to protect nature , I do welcome you..

      My intention is make the people to understand what is what . thats all.

      Anyway thank you for your visit once again. Kindly have a visit again.

      Delete
  4. நாட்டில் நிறையப் பேர் அந்த பெண்ணைப் போன்றுதான் இருக்கிறார்கள். நல்ல பதிவு.சிலர் அப்படித்தான் விமர்சனம் செய்வார்கள். தங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  5. நண்பரே , தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  6. What do you say about this?
    http://www.dianuke.org/kalpakkam-maps-official-health-study/

    ReplyDelete
    Replies
    1. Dear Friend, Thank you for your visit and your valuable question..

      I had a visit to the above link stated by you and found some statistics . But unfortunately , i found that there was no information about the sources of the statistics. can you please tell me , from which source the Statistics was taken..? it will help us to discuss deepper..

      Thank you and waiting for you...

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி